ஒவ்வொரு சிவாலயத்துக்குப் பின்னாலும் அறிவியலுடன் கூடிய ஒரு கதை இருக்கும். பட வேலைகள் முடிஞ்சு ஓய்வா இருந்தோம்னா கோயில்களைப் பார்க்கக் கிளம்பிடுவோம். தொடக்கத்துல பக்தியில்தான் கோயில்களுக்குப் போனேன். இப்போ அதுக்குள்ள இருக்குற அறிவியல் ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு’ என தன் ஆன்மிகம் பற்றி பேசியுள்ளார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி.