இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு, ரவி சாஸ்திரி உட்பட ஆறு பேரை பிசிசிஐ பரிசீலனை செய்ய உள்ளது. டாம் மூடி, மைக் ஹெசன், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங், ரவி சாஸ்திரி ஆகிய ஆறு போட்டியாளர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்கின்றனர்.