மதுரை அழகர்கோயில் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடி பிரம்மோற்சவம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரை வழிபடுவர். அவர்களுள், கோட்டையூர் என்னும் ஊரிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர். காரணம் அவர்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டுதான் இன்றும் அழகர்கோயில் வருகிறார்கள்.