அவலாஞ்சி 7.8.2019 அன்று மட்டும் 820 மி.மீ. எனவும், 8.8.2019 அன்று மட்டும் 911 மி.மீ. எனவும் மழையின் அளவு பதிவானதால், வானிலை வல்லுநர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டின் கணக்கீட்டின்படி மழையின் அளவும், மழைப்பொழியும் மாதங்களும் எந்த இடத்திலும் ஒரே மாதிரியாக இல்லை என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் அறிவியலாளர்கள்.