2017-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு ஆன செலவு விவரம், விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகக் கொடியேற்றிய 2017 சுதந்திர தினத்துக்கு 52,07,423 ரூபாயைச் செலவழித்திருக்கிறார்கள். 'அரசு நிகழ்ச்சி செலவுகள்' என்ற தலைப்பில் இந்தப் பணம் பற்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகலாம்.