கர்நாடகாவில் உள்ள தேவதூர் தாலுகாவில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து பாலம் ஒன்று நீருக்கடியில் மூழ்கியது. அவ்வழியாக வந்த அம்புலன்ஸ் ஒன்று நீரைக்கடந்து செல்ல வெங்கடேஸ் என்ற சிறுவன் உதவியுள்ளான். இத்தகைய செயலை தைரியமாக செய்த சிறுவனுக்கு மாவட்ட நிர்வாகம் விருது வழங்க திட்டமிட்டுள்ளது.