வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார், கர்ப்பிணியாக இருக்கும் மனைவி விமலா மற்றும் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் வந்தார். தரிசித்த பின்பு அங்கேயே விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதி, தங்களுக்கு அத்திவரதரே வந்து பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.