சில நாள்களுக்கு முன்னால் ஸ்மார்ட்போன் கேமரா தொடர்பாக சாம்சங் வெளியிட்ட ஒரு தகவல்தான் மொபைல் போன் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக். போனில் பயன்படுத்தும் வகையிலான 108 MP கேமரா சென்ஸாரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். மொபைலில் இது சாதாரண விஷயம் இல்லை என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.