அண்மையில் சந்திரயான் -2 இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்நிலையில் தற்போது புவி வட்டப்பாதையிலிருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சந்திரனில் தரையிறங்கும் பணிகளையும் அது தொடங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.