நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தன் 6 வார குழந்தையுடன் வந்தார் ஒரு உறுப்பினர். அவர் பேசும்போது அவரது குழந்தையை வாங்கிய சபாநாயகர், அக்குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்து கவனித்துக்கொண்டார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருவதுடன் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.