ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. செல்லமாக ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்டுவந்த ஆண்ட்ராய்டின் பத்தாவது வெர்ஷனான இதன் பீட்டாவை பலரும் தற்போதே பயன்படுத்தி வருகின்றனர். பத்தாவது ஆண்ட்ராய்டு வெர்ஷனான இதற்கு 'ஆண்ட்ராய்டு 10' என்றே பெயர் வைத்திருக்கிறது கூகுள்.