அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் படித்தவர். அங்கு அவர் வசித்த கட்டடம் மியூசியமாக மாற்றப்பட்டது. கட்டடத்தை நிரந்தரமாக மியூசியமாக மாற்றுவதற்காக இந்தியத் தூதரகம், லண்டன் குழுவிடம் விண்ணப்பித்தது. ஆனால், மக்கள் குடியிருக்கும் பகுதியில் மியூசியமாக மாற்ற லண்டன் நகரத் திட்டக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.