`பிஜிஏ டூர் சாம்பியன் ஷிப்' கோல்ப் போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்துவருகிறது. நேற்று மாலை நடந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.  அப்போது திடீரென பயங்கரமான மின்னல் தாக்கியது. மரத்துக்கு கீழே நின்றிருந்த 6 பேர் இதில் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.