வேளாங்கண்ணி தேவாலயத்தில், மாதா பிறந்தநாளை ஆண்டுத் திருவிழாவாக 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. வரும் 29 -ம் தேதி தொடங்கும் இவ்விழா அடுத்த மாதம் செப்டம்பர் 7 -ம் தேதி நடைபெறும். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.