நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. கும்பகோணத்தில் இருக்கும் சிறப்புமிக்க விநாயகர் கோயில் ஒன்றில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது. இதைப் பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்க்கக் கண்டு மகிழ்ந்து வழிப்பட்டுச் சென்றனர்.