வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.