நமக்குத் தேவையான தகவல்களை நம் விரல் நுனியில் நமக்குத் தருகிறது கூகுள். கூகுளில் தேடினால் கிடைக்காத விஷயமே இல்லை. தற்போது, மக்களால் அதிகம் விரும்பப்படும் சிறந்த பிராண்ட்களின் பட்டியலில் கூகுள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக YouGov நிறுவனம் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.