``சந்திரயான் 2-வின் அடுத்த நடவடிக்கை, விக்ரம் லேண்டரை சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிப்பது, இன்று (செப்டம்பர் 02, 2019) 12.45 - 13.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் இரண்டு சுற்றுப்பாதைகள் சுற்றி சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ கூறியுள்ளது.