வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டிய இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதனால் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.