தோனியின் சாதனையை முறியடித்தது தொடர்பாகப் பேசிய கோலி, `கேப்டனாக அதிக வெற்றியைப் பதிவுசெய்ததற்கு மிகமுக்கியக் காரணம், தரமான அணிதான். கேப்டன்ஸி என்றால் நமது பெயருக்கு முன்னால் `ஸி’ என்ற எழுத்து இருக்கும். அவ்ளோதான். அதைத்தாண்டி, வெற்றி என்பது கூட்டு முயற்சிக்குக் கிடைக்கும் பலன்’ என்றார்.