பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக  முன்னாள் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப்பதவியில் மூன்று ஆண்டுகள் தொடர்வார்.  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அப்போதைய தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.