இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையையொட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாக், கோட்லி பகுதிகளில் பாகிஸ்தான் சுமார் 2,000 வீரர்களைக் கூடுதலாகக் குவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.