நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டியில், மலிங்கா சர்வதேச டி 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்னும் சாதனையை படைத்தார். 4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் வெற்றிக்கு உதவினார்.