பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் இன்று காலை பேசினார். அப்போது அவர், `நிலவுக்குச் செல்லும் முயற்சியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சிதான். இந்த நாட்டின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு அதிகம். நாடு எப்போதும் உங்களுடன் இருக்கும்’ என்றார்.