சந்திராயன் 2 தோல்வி குறித்து கலாய்க்கும் விதமாக பாக்., அமைச்சர் ஃபவாத் ஹுசைன் பதிவிட்ட ட்வீட்டில் சாட்டிலைட் என்னும் வார்த்தையை தவறாகக் குறிப்பிட, ` ஒரு நாட்டின் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட்டின் ஸ்பெல்லிங்கூட தெரியவில்லை. முதலில் அதைக் கற்றுக்கொண்டு வாருங்கள். பிறகு பேசலாம்' என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.