தன்னுடைய அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பானது, தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரோகந்த். இதில், இசைக்கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.