BYD நிறுவனம் Pure T3 MPV மற்றும் Pure T3 மினிவேன் என இரண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மின்சாரப் பேருந்துகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவரும் இந்நிறுவனம், இந்தியச் சந்தையை மனதில்வைத்து இந்தியாவிலேயே உருவாக்கியுள்ள கார்கள்தாம் இவை. இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் முதல் எலெக்ட்ரிக் MPV இதுதான்.