கடந்த ஜூலை 22-ம் தேதி எந்தக் குழப்பமும் இல்லாமல் விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் எந்த சிக்கலுமின்றிப் பயணித்த விண்கலம், கடைசி 2.1 கிலோமீட்டர், அதாவது மொத்த பயணத்தில் 0.0006 சதவிகித தூரத்தைக் கடப்பதற்குமுன் சிக்னல் அனுப்பத் தவறியது. ஆனால், இது பின்னடைவுதானே தவிர நிச்சயம் தோல்வியல்ல.