தமிழக முதல்வர் பழனிசாமி 14 நாள்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற அமைச்சர்கள்  ”அண்ணே, கோட் சூட்ல அசத்திட்டீங்க” என்றனர். அதற்கு, ``பத்து நாளா ஸ்டாலின் தூங்குனாரா... இல்லையா.. மனுஷன் நொந்துபோயிருப்பாரே” என எடப்பாடியார் கிண்டலடிக்க, அமைச்சர்கள் கலகலத்துள்ளனர்.