தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ` இந்தியப் பொருளாதாரத்தை வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பா.ஜ.க அரசு திணறிவருகிறது. பா.ஜ.க-வின் 5 ஆண்டுகால ஆட்சி என்பது இந்தியாவின் துயரமாகும். `சீனாவின் துயரமான மஞ்சள் நதிபோல இந்தியாவின் துயரம் பா.ஜ.க ஆட்சிதான்’ என்றார்.