மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், 1984-ம் ஆண்டில் வன்முறை நடந்தபோது, அதில் பங்கேற்றதாகத் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இந்த நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `சீக்கியர் கலவர வழக்குகளில், 7 வழக்குகள் மீண்டும் திறக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.