வலுவான கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டிரா செய்தது. காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாத கேப்டன் சேத்திரி ட்விட்டரில், `டியர் இந்தியா... இதுதான் எனது அணி. இவர்கள்தாம் எம் வீரர்கள். இந்தக் கணத்தில் நான் எத்தனை பெருமையாக உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது’ என்றார்.