மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, ஆட்டோமொபைல் துறையையே புரட்டிப்போடுமளவுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்தால், எதிர்மறையான தகவலே கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருவதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.