ஆலோவேரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் கோலோச்சி வரும் காயகற்ப மூலிகை.  அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.