மத்திய ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள காங்கோ நாட்டில், ஐ.நா அமைதிப்படையில் பணியிலிருந்த இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் கௌரவ் சோலாங்கி கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இதுகுறித்த செய்தியை ஐ.நா, இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவித்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.