Mi TV 4X65-inch , இதுவரை வந்திருக்கும் ஷியோமி டி.விகளிலேயே அளவில் பெரியது இதுதான். இந்தப் பிரமாண்ட டி.வி 4K UHD 10-bit டிஸ்ப்ளேயுடனும் HDR10 சப்போர்ட்டுடனும் வெளிவருகிறது. நிறங்களைச் சரியாக பளிச்சிடவைக்க, முதல்முறையாக Vivid Picture Engine-ஐ பயன்படுத்துமாம் இது. செப்டம்பர் 29 விற்பனைக்கு வரும் இதன் விலை 54,999 ரூபாய்.