கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், எறிபத்த நாயனாரின் பூக்குடலைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி, ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, தாங்கள் கொண்டுவந்த பூக்களை இறைவனுக்கு வழங்கி வணங்கினார்கள்.