‘பார்வை பற்றிய உலக அறிக்கை’ என்ற பெயரில் உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மொத்த உலகத்திலும் சுமார் 220 கோடி மக்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறை மாற்றம், மருத்துவ வசதி இல்லாமை, அதிக செல்போன் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.