‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையின் அழகை மெருகேற்ற ரூ.33 கோடியை ஒதுக்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், கோட்டையைச் சுற்றியுள்ள அகழியின் ஒரு பகுதியைத் தூர்வாருவதற்கே 11 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல் நடக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.