சமீபகாலமாக ஐ.நா அமைப்புக்குச் செலுத்தவேண்டிய பங்களிப்பை உறுப்பு நாடுகள் முறையாகச் செலுத்தவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் ஐ.நா. சிக்கியிருக்கிறது. விளைவாக, நடப்பு மாதச் சம்பளம்கூட அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் ஆன்டானியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.