ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ், அவ்வப்போது சைக்கிளில், நீண்ட பயணத்துக்குக் கிளம்பிவிடுவார். பெங்களூரு, கன்னியாகுமரி, சென்னை எனப் பல இடங்களுக்கு சைக்கிளில் சென்று அலுத்தவர், அடுத்த ஒரு பெரும் பயணத்தில் பிஸியாக இருக்கிறார். ஜம்முவிலிருந்து கன்னியாகுமரி வரை 3,500 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.