டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில், சிங்கம் இருந்த பகுதிக்குள் இளைஞர் ஒருவர் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் அந்த நபரை சிங்கத்திடமிருந்து மீட்டனர். நல்ல வேளையாக, சிங்கம் அந்த நபரைத் தாக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் வந்து அந்த நபரை அழைத்துச்சென்றனர்.