ஜாவா பிராண்ட் அறிமுகமாகி 90 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, ஒரு லிமிடெட் எடிஷன் பைக்கை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. ‘90th Anniversary Edition’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது,ஜாவா பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. 90 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான விலையிலேயே விற்கபடுகிறது.