இங்கிலாந்து இளவரசர் வில்லியமும் மனைவி கேத் மிடில்டன்னும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கேத் மிடில்டன் பாகிஸ்தானில் இறங்கும்போது அந்நாட்டு பாரம்பர்ய உடை அணிந்திருந்தார். ஒவ்வொரு நாளும் அதே போன்ற உடைகளை அணிவதால் பாகிஸ்தானியர்கள் கேட் மீது அன்பைப் பொழிந்து வருகின்றனர்.