திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிறைவுற்றது. சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து, வீதி உலா வருதல் நடைபெற்றது. இரவில், 108 தேவர்கள் சந்நிதி முன்பு ஜெயந்திநாதரின் கண்ணாடி பிம்பத்திற்கு சாயாபிஷேசம் நடைபெறவுள்ளது. நாளை தோள் மாற்றுதலும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

TamilFlashNews.com
Open App