வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக வைத்தால் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு சோதனை முயற்சியை செயல்படுத்தியது. இதன் முடிவில், வழக்கத்தைவிட 40 சதவிகிதம் அதிக உற்பத்தி நடந்துள்ளதும் பணியாளர்கள் கூடுதல் திறனுடன் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.