விதைகள் தூவுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாயப் பணிகளுக்குச் சுமார் 20 வகையான ரோபோக்களை உருவாக்க, ஜப்பான் அரசு மானியம் வழங்கிவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஜப்பான் வயல்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாகக் குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு ரோபோக்களை பணியில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.