அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவிவருவதால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து அம்மாநில ஆளுநர் அறிக்கை அளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனாவுக்கு போதிய அவகாசம் ஆளுநர் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் இப்படியொரு அறிக்கையை ஆளுநர் மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்.