சபாநாயகரின் நடவடிக்கைகளால் மக்களுக்கு நிலையான அரசு கிடைக்காமல் போகிறது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், "அரசமைப்புக்கு எதிராக சபாநாயகர் செயல்படுவது அதிகரித்துள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.