பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வீட்டிற்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இன்று திடீரென வந்தார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி அமைதியாகவே இருந்துவருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  ஹெச்.ராஜா  வீட்டிற்கு அழகிரி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.